உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பணி முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளபுதிய துணை இயக்குநர் அலுவலகம்

பணி முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளபுதிய துணை இயக்குநர் அலுவலகம்

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உழவர்சந்தை வளாகத்தில் ரூ.80லட்சத்தில் வேளாண் வணிகம், விற்பனை துணை இயக்குநர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு கிடைக்காமல் பயன்பாட்டிற்கு கொண்டு வருதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை வளாகத்தில் ரூ.80 லட்சம் செலவில் தரைத்தளம், முதல் தளத்துடன் கூடிய வேளாண் விற்பனை, வணிகத்துறை துணை இயக்குநர் அலுவலகம், புதிய முகப்புடன் கூடிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முடிந்தும் இதுவரை மின் இணைப்பு கிடைக்காமல் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் உள்ளது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில் விற்பனை, வணிகத்துறை, துணை இயக்குநர் அலுவலகம் வேளாண் துறை சார்ந்த பொறியாளர்கள் திட்ட மதிப்பீடு, வரைபடம் தயார் செய்து கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் கட்டுமானப்பணி முடிந்தற்கான சான்றிதழ் நகராட்சியில் வாங்கித்தரச் சொல்கின்றனர். இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது.மின் இணைப்பு கிடைத்தவுடன் புதிய துணை இயக்குநர் அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை