உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் செம்மறியாடு இறைச்சி விலை கிடு.. கிடு..

கீழக்கரையில் செம்மறியாடு இறைச்சி விலை கிடு.. கிடு..

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் பக்ரீத் பண்டிகை காலங்களில் செம்மறி ஆட்டுக்கறி விலை உயர்ந்ததால் அசைவ பிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.பொதுவாக கீழக்கரை நகர் பகுதிகளில் அதிகபட்சமாக செம்மறி ஆட்டிறைச்சியை அதிகம் பயன்படுத்துகின்றனர். பக்ரீத் பண்டிகை சமயத்தில் செம்மறி ஆட்டிறைச்சி கிலோ ரூ.1000த்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்களின் தொடர் எதிர்ப்பால் முன்பு இருந்த விலையான ரூ.900 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அசைவ பிரியர்கள் கூறியதாவது: ஏழை, நடுத்தர மக்கள் மீன்களுக்கு அடுத்தபடியாக இறைச்சியை சாப்பிடுகின்றனர். ஒரு சில கடைகளில் செம்மறி ஆட்டிறைச்சி கிலோ ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தனிக்கறி ரூ.1200க்கு விற்பனை செய்யப்பட்டது.ஏழை மக்களின் நலன் கருதி கீழக்கரையில் இறைச்சி விலையை முன்பு இருந்ததைப் போல கிலோ ரூ.900க்கு விற்பனை செய்யவும் விலையை கட்டுப்படுத்தவும் வேண்டும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை