| ADDED : ஏப் 11, 2024 06:21 AM
ராமநாதபுரம் : ஏப்.19ல் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல்ஆணையம் ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பு கோடவுனில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் போட்டோவுடன் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 25 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா உடன் 26 பேர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த உள்ளனர். இவற்றில் சின்னங்கள் பொருத்துவதற்கான பயிற்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு பெல் நிறுவனப் பொறியாளர்கள் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கோடவுனில் வேட்பாளர்கள் போட்டோவுடன் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.முதலில் பகுஜன் சமாஜ் கட்சி சிவானந்தம், யானை, 2 வது இடத்தில் அ.தி.மு.க., ஜெயபெருமாள் இரட்டை இலை, 4வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் டாக்டர் சந்திரபிரபா மைக் சின்னம், 6 வது இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ்கனி ஏணி, இதற்கு எதிரில் மற்றொரு இயந்திரத்தில் 6 வது இடத்தில் (வரிசை எண் 22) பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னம் இடம்பெற்றுள்ளது.