உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோவிலில் திருட்டு: மிளகாய் பொடி துாவி சென்ற கொள்ளையர்கள்

கோவிலில் திருட்டு: மிளகாய் பொடி துாவி சென்ற கொள்ளையர்கள்

உத்தரகோசமங்கை : ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளத்தில், பெரிய கருத்தார் உடையார் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.நேற்று காலை, வழக்கம் போல் பூஜாரி கோவிலை திறந்து பார்த்த போது உண்டியல், அலுவக பீரோ உடைக்கப்பட்டு பணம், நகைகள் கொள்ளை போயிருந்தன.கீழக்கரை போலீசார் விசாரணையில், மர்ம நபர்கள் கோவில் மதில் சுவர் மீது ஏறி குதித்து, பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மற்றும் உண்டியலில் இருந்த 4 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். மேலும், கோவிலை சுற்றி வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் 'ஹார்ட் டிஸ்க்'கையும் எடுத்துக் கொண்டு, மிளகாய் பொடியை துாவி சென்றது தெரிய வந்துள்ளது.கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி