உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாலிநோக்கத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்; விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை தேவை

வாலிநோக்கத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்; விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை தேவை

வாலிநோக்கம் : கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாலிநோக்கம் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.பலத்த பேரலை அங்குள்ள கடற்பாறையில் பட்டு முத்துச்சரமாக தெறிக்கும் எழில்மிகு காட்சியை காண்பதற்காகவும் வருகின்றனர்.நீண்ட நெடிய வெள்ளை மணற்பரப்பை கொண்ட வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரையில் 2 கி.மீ.,க்கு கடல்பாறைகள் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளன.இங்குள்ள வாலிநோக்கம் மன்னார்வளைகுடா கடலில் பாறைகள் நிறைந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி இல்லை. பாறைக்கு அடுத்தபடியாக பல அடி ஆழமிக்க அபாயகரமான கடல் பகுதியாக உள்ளது. கடல் அருகே பாறையில் இயற்கையாக அமைந்த நீச்சல் குளம் உள்ளது.மணல் சூழ்ந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் மிகுதியில் குளிக்கின்றனர். எழில் மிகுந்த பேரலைகளின் தாக்கத்தை காண்பதற்காக காலை மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொழுது போக்குவதற்காக வருகின்றனர்.

எச்சரிக்கை பலகை தேவை

மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஆழ்கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.கடற்கரையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை