மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
5 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
5 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
5 hour(s) ago
திருப்புல்லாணி : -திருப்புல்லாணி அருகே அச்சடிபிரம்பு கிராமத்தில் உள்ள ஐந்திணை மரபணு பூங்காவிற்கு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.கடந்த 2015ல் திறக்கப்பட்ட ஐந்திணை பாலை நில பூங்கா 10 ஏக்கரில் அமைந்துள்ளது. ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. இயற்கை மற்றும் மண் சார்ந்த தாவரங்கள், மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தடாகம் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான ஏராளமான குடில்கள் உள்ளன. சுற்றிலும் பசுமை போர்வை விரித்தது போன்று புற்கள் நிறைந்து காணப்படுகிறது.ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்வமுடன் கோடை விடுமுறையை கழிப்பதற்கு காலை, மாலை நேரங்களில் அதிகளவு வந்து கண்டுகளித்து செல்கின்றனர். குழந்தைகள் விளையாடுவதற்காக தனியாக பொழுது போக்கு பூங்கா உள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago