உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊட்டச்சத்து மேலாண்மை விவசாயிகளுக்குப் பயிற்சி

ஊட்டச்சத்து மேலாண்மை விவசாயிகளுக்குப் பயிற்சி

உச்சிபுளி, : ராமநாதபுரம் அருகே அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கும்பரம் கிராமத்தில் ஊட்டச்சத்து மேலாண்மை, உரம் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் செல்வம் தலைமை வகித்தார்.இதில் பயிர் சாகுபடிக்கு மண்வள அட்டையை பயன்படுத்தி உரம் இடுதல், திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்களின் பயன்கள், உபயோகம் குறித்து எடுத்துரைத்தனர்.மண்டபம் வேளாண் அலுவலர் கலைவாணி, வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் கண்ணையன், உதவி வேளாண் மண்டல அலுவலர் முகமது யூசுப் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி