உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் மோதல்: டிரைவர் பலி

டூவீலர் மோதல்: டிரைவர் பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் மணல் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர் பலியானார்.ராமநாதபுரம் அருகே கவரங்குளத்தை சேர்ந்த சுந்தராஜ் மகன் காளிதாஸ் 27. இவர் பேராவூரிலிருந்து மாடக்கொட்டான் செல்லும் ரோட்டில் டூவீலரில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு சென்றார்.எதிரில் பரமக்குடியை சேர்ந்த சாந்தமூர்த்தி மகன் பாலமுருகன் 35, டூவீலரை ஓட்ட கதிரேசன் என்பவர் பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.இரு டூவீலரும் கிழக்கு கடற்கரை சாலையில் நேருக்குநேர் மோதியதில் காளிதாஸ், பாலகிருஷ்ணன், கதிரேசன் ஆகிய மூவரும் காயமடைந்தனர்.காளிதாஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மதுரை கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.காளிதாஸ் மனைவி வள்ளி புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ