உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க வலியுறுத்தல் 

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க வலியுறுத்தல் 

திருவாடானை: அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அரசு தொடக்கபள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுக்கு நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது. இந்த சீருடைகளை, பள்ளிகள் திறக்கும் நாளில் வழங்குவதில்லை. பள்ளிகள் திறந்து, இரண்டு மாதங்கள் கழிந்த பிறகு வழங்கப்படுகின்றன.இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், திருவாடானை தாலுகாவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. அரசு பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு அரசால் வழங்கப்பட்ட பழைய சீருடையை அணிந்து செல்கின்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கியது போல் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே புதிய சீருடைகள் வழங்க வேண்டும் என்றனர்.ஆசிரியர்கள் கூறுகையில், சீருடை தாமதமாகத்தான் வருகிறது. அதனால் பள்ளிகள் திறக்கும் நாளில் சீருடைகளை கொடுக்க முடிவதில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை