உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாழவந்த அம்மன் ஆடி பொங்கல் உற்ஸவம்

வாழவந்த அம்மன் ஆடி பொங்கல் உற்ஸவம்

பெருநாழி : பெருநாழி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோயிலில் ஆடி பொங்கல் உற்ஸவம் நடந்தது. 10 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் அக்னி சட்டி, முளைப்பாரி, பொங்கல் பானையுடன் பொந்தம்புளி கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக மேளதளங்கள் முழங்க ஊர்வலம் நடந்தது. வாழவந்த அம்மன் கோயிலுக்கு முளைப்பாரி ஊர்வலம் வந்த பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.ஏராளமான பெண்கள் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை