மேலும் செய்திகள்
வாஜ்பாய் பிறந்த நாள் விழா
23 hour(s) ago
மருத்துவ முகாமில் வசதியின்றி மாற்றுத் திறனாளிகள் அவதி
23 hour(s) ago
தர்மசாஸ்தா -புஷ்கலா தேவி திருக்கல்யாணம்
23 hour(s) ago
கிறிஸ்துமஸ் விழா
23 hour(s) ago
சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சி ரோஜ்மா நகரில் கடல் அரிப்பால் கரையோர கல்லறை தோட்டம் மண்ணரிப்பால் தொடர்ந்து சேதமடைகிறது.உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எலும்புக்கூடுகள் வெளியே தெரிவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலோரப் பகுதியில் மீனவர் கிராமமாக ரோஜ்மா நகர் உள்ளது. இங்கு கடற்கரையோர கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் ஏராளமான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.கடற்கரையில் இருந்து 50 மீ.,ல் கல்லறை தோட்டம் உள்ளது. ஏராளமான தென்னை, பனை மரங்களும் கடற்கரையோரம் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பலத்த காற்றின் தாக்கத்தாலும், மண்ணரிப்பாலும் கடல் நீர் அப்பகுதியில் புகுந்துள்ளது.பனை மரம் மற்றும் தென்னை மரங்கள் மண்ணரிப்பால் கரையோரம் சாய்ந்துள்ளன. கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கும் எலும்பு கூடுகளை அலைகள் இழுத்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அப்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஜூன் 9ல் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் சென்று கடல் அலை தடுப்புச் சுவர் கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்தார். தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.இதையடுத்து ரோஜ்மா நகர் கிராம மக்கள் ஒன்றிணைந்து 2500 மணல் மூடைகளை நிரப்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்புகளால் தடுப்பு வேலி அமைத்து அவற்றை சுற்றிலும் மணல் தடுப்புச் சுவற்றை தற்காலிகமாக ஏற்படுத்தி வருகின்றனர். கிராம மக்கள் கூறியதாவது:மீன்வளத்துறையினர் உரிய முறையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கடல் அலை தடுப்புச் சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்கள் ஒன்றிணைந்து ரூ.3 லட்சம் சொந்த நிதியில் தற்காலிக தடுப்புச் சுவர் அமைத்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.---
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago