உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குடிநீர் வசதி இல்லாததால் டிராக்டர் தண்ணீருக்காக காத்திருக்கும் கிராம மக்கள்

காவிரி குடிநீர் வசதி இல்லாததால் டிராக்டர் தண்ணீருக்காக காத்திருக்கும் கிராம மக்கள்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் காவிரி குடிநீர் வசதி இல்லாததால் டிராக்டர் தண்ணீருக்காக கிராம மக்கள் காத்திருந்து பிடித்து செல்கின்றனர்.முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே காவிரி குடிநீர் முறையாக வருவதில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.தண்ணீருக்காக கிராமத்திற்கு எப்போதாவது வரும் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில நாட்கள் டிராக்டர் வராத நாட்களில் குடிநீருக்காக மக்கள் அவதிப் படுகின்றனர்.டிராக்டர் வருவது தெரியாதால் நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயம், அத்தியாவசிய வேலைக்கும் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சடையனேரி கிராமத்திற்கு காவிரி குடிநீர் முறையாக வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி