மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
13 hour(s) ago
மண்டபம் : மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆபரேட்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பள பட்டியல் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிலுவைத்தொகை வழங்காத ஊராட்சிகளில் வழங்கப்பட வேண்டும்.வாலாந்தரவை ஊராட்சியில் ஓ.எச்.டி., ஆபரேட்டருக்கு 3 மாத சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டபம் ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அய்யாத்துரை தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி போராட்டத்தை துவக்கி வைத்தார். சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் குருவேல், வாசுதேவன், பிரான்சிஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர்.ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago