மேலும் செய்திகள்
ஓவியக்கலையின் பிரமாண்டம் ராமலிங்க விலாசம்
3 hour(s) ago
தேவ தீர்த்தம், அமுத தீர்த்த கிணறை புதுப்பித்து பூஜை
4 hour(s) ago
செயற்குழு கூட்டம்
4 hour(s) ago
திருவாடானையில் மழை: விவசாயிகள் நிம்மதி
4 hour(s) ago
கீழக்கரை: கீழக்கரை- ராமநாதபுரம் கிழக்குகடற்கரை சாலையில் விபத்துக்களை தவிர்க்க முட்செடிகளை அகற்றி, அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.2010ல் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக துாத்துக்குடி வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு மராமத்து பணிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2021ல் ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை வரை உள்ள இடங்களில் அதிகம் விபத்து நிகழக்கூடிய சாலையை அகலப்படுத்தியும் புதிய வரத்துக்கால்வாய் பாலம் எழுப்பியும் பணிகள் நடந்தது.இருவழி தார் சாலையின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் சாலை குறுகிய நிலையிலே உள்ளது.இதனால் இரு பஸ்கள் ஒரே நேரத்தில் வரும்பொழுது டூவீலர் மற்றும் இதர வாகனங்களில் வருவோர் சாலையோர பள்ளங்களிலும், ரோட்டோரங்களிலும் வாகனங்களை நிறுத்திச் செல்லும் நிலை ஏற்படுகிறது.இதனை தவிர்க்க கீழக்கரை கிழக்குக் கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி வாகனங்கள் செல்வதற்கு சேதமடைந்த கிராவல் மண் சாலையை புனரமைப்பு செய்ய வேண்டும்.சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago