உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி சின்னக்கடை தெரு நகராட்சி வளாகத்தில் கடைகள் கட்டப்படுமா

பரமக்குடி சின்னக்கடை தெரு நகராட்சி வளாகத்தில் கடைகள் கட்டப்படுமா

பரமக்குடி : பரமக்குடி சின்னக்கடை தெருவில் உள்ள நகராட்சி வளாகத்தில் கடைகள் கட்டப்படாமல் உள்ளதால் தெருக்களில் நெரிசல் அதிகரிக்கிறது.பரமக்குடி நகராட்சி பகுதியில் பெரிய கடை மார்க்கெட், சின்ன கடை தெரு மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் எமனேஸ்வரம் காய்கறி மார்க்கெட் தெரு என உள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே தெருவோரங்களில் காய்கறி கடைகள் அமைத்தும் வியாபாரம் செய்கின்றனர். தொடர்ந்து பெரிய கடை மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக பரமக்குடி சின்னக்கடை தெருவில் உள்ள மார்க்கெட்டில் நாள்தோறும் காலை 7:00 மணி துவங்கி மதியம் 1:00 மணி வரை என நுாற்றுக்கணக்கான தெருவோரக்கடைகளை அமைக்கின்றனர். இந்நிலையில் சின்னக்கடை தெருவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி வளாகத்தில் பல கடைகள் இருந்தது. ஆனால் ஒவ்வொரு கடையும் சேதமடைந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இடிக்கப்பட்டு தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் நிரந்தர காய்கறி மார்க்கெட் இன்றி தெருக்களில் மட்டுமே கடைகளை விரிக்கும் படி உள்ளது. ஆகவே காலை முதல் மாலை வரையும் தெருவோர கடைகள் இருக்கின்றன.இதனால் இதன் வழியாக செல்லும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், பள்ளி மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் இப்பகுதியில் உள்ளது. ஆகவே நகராட்சி வளாகத்தில் நிரந்தர கடைகளை கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ