உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் வேண்டும் டூவீலர் ஸ்டாண்ட் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி

ஆர்.எஸ்.மங்கலத்தில் வேண்டும் டூவீலர் ஸ்டாண்ட் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி

ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் இருப்பதால் சுற்றுப்புற பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்.எஸ்.மங்கலம் வந்து வெளியூர் செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் வகையில் பஸ் வசதி உள்ளது.இதனால் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது டூவீலர்களை பாதுகாப்பற்ற நிலையில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு பஸ்சில் வெளியூர் சென்று வருகின்றனர். இதனால் டூவீலர்கள் சேதம் அடைவதுடன் திருடு போகும் சம்பவங்களும் நடக்கின்றன. பல ஆண்டுகளாக டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் டூவீலர் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக நிறுத்தி செல்லும் வகையில் டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ