உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில்களில் வழிபாடு

கோயில்களில் வழிபாடு

திருவாடானை : திருவாடானை சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன் கோயில்களில் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. ஹிந்து மக்கள் நல இயக்கம், அமராவதிபுதுார் யடிஸ்வரி சாரதேஸ்வரி பிரியாம்பா சார்பில் நடந்த இந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை ஹிந்து மக்கள் நல இயக்க மாநில தலைவர் இளையராஜா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி