| ADDED : பிப் 05, 2024 10:59 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தை சேர்ந்த பாப்பம்மாள் தனது நுாறாவது பிறந்த நாளை 8 பிள்ளைகள், 60 பேரன், பேத்திகளுடன் கொண்டாடினார்.ராமநாதபுரம் காளிகாதேவி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கச்சாமி மனைவி பாப்பம்மாள். இவர் 1924ல் பிறந்தார். தற்போது 100 வயதாகிறது. இவருக்கு 6 மகள்கள், 2 மகன்கள் என 8 பிள்ளைகள் உள்ளனர்.அவர்கள் வழியில் பேரன், பேத்தி, கொள்ளுப்பேத்தி, பேரன் என 60 பேர் உள்ளனர். நேற்று முன்தினம் உறவினர்கள் இணைந்து பாப்பம்மாளுக்கு 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். பூமாலையுடன், ரூபாய் நோட்டு மாலை, சால்வை அணிவித்து பாட்டியிடம் ஆசிபெற்றனர்.கம்பு, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி, மட்டை அரிசி சாதம் என அந்த காலத்தில் உள்ள சத்தான உணவுகளை சாப்பிட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். நுாறாண்டுகள் வரை நோயின்றி வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் என உறவினர்கள் கூறினர்.