முதுகுளத்துார் சப் டிவிஷனில் 1000 சிசிடிவி கேமராக்கள்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சப் டிவிஷனுக்கு உட்பட்ட கிராமங்களில் குற்ற சம் பவங்களை தடுக்க, கண்டறியும் விதமாக தற்போது வரை 1000 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என டி.எஸ்.பி., சண் முகம் கூறினார். முதுகுளத்துார், கீழத்துாவல், தேரிருவேலி, கடலாடி, இளஞ்செம்பூர், கீழச்செல்வனுார், பேரையூர் ஸ்டேஷன் உள்ளது. முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தங்கள் கிராமங்களில் பாதுகாப்பு நலன் கருதி 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகம் கூறியதாவது: முதுகுளத்துார் சப் டிவிஷனுக்கு உட்பட்ட கிராமங்களில் இதுவரை ஆயிரம் 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி., திட்டத்தில் 400 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் குட்கா, புகையிலை விற்றவர்கள் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1708 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. எட்டு வழக்குளில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்ற வாளிகள் 5 பேர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரேனும் மணல் திருட்டு, கள்ள சந்தையில் மது விற்பது உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தால் போலீ சாரிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.