உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆடு திருட முயன்ற 2 பேர் கைது

ஆடு திருட முயன்ற 2 பேர் கைது

கமுதி : கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த ஊரில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆடுகளை திருடுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிராம மக்கள் சுற்றி வளைத்து ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்பு கமுதி போலீஸ் விசாரணையில் அம்மன்பட்டி பிரித்விராஜ் 27, மூலக்கரைபட்டி சரவணன் 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி