உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா சிக்கியது

கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா சிக்கியது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரை, இலங்கைக்கு அருகே உள்ளதால், இங்கிருந்து கஞ்சா உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்படுகின்றன. எம்.ஆர்.பட்டினம் தொண்டிக்கு இடையேயுள்ள கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின்படி, சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது, கடற்கரையில் பதுக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்த முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை