மேலும் செய்திகள்
விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கோலாகலம்
28-Aug-2025
80 சிலைகள் பிரதிஷ்டைபரமக்குடி: பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஹிந்து முன்னணி சார்பில் 32ம் ஆண்டு விநாயகர் விசர்ஜன விழா நடந்தது. பரமக்குடி நகராட்சியில் 60, கிராம பகுதிகளில் 20 விநாயகர் சிலைகள் உட்பட 80 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், திரு விளக்கு வழிபாடு, உறியடி, வினாடி - வினா, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அன்ன தானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு பரமக்குடி, எமனேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் புறப்பட்டு சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி அருகில் சென்றடைந்தது. ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர்கள் கங்காதரன், ரத்தின சபாபதி, மாவட்ட பொருளாளர் ஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் குமரன் வரவேற்றார். கன்னியாகுமரி கோட்ட செயலாளர் கண்ணன் பேசுகையில், 'நம்ம சுவாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்,' என்றார். மாலை 6:00 மணிக்கு துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக இரவு 8:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு வைகை ஆறு படித் துறையை அடைந்தது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர். பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். நகர் பொதுச் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். *ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அக்னி தீர்த்த கடலில் கரைத்தனர். நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணியினர் 25 இடங்களில் வைத்திருந்த விநாயகர் சிலைகளுக்கு அந்தந்த பகுதி பக்தர்கள் பூஜை செய்து தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று மாலை ராமேஸ்வரம் தேவர் சிலையில் இருந்து 25 விநாயகர் சிலைகளையும் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் பக்தர்கள் ரயில்வே பீடர் ரோடு, ராமர் தீர்த்தம் தெரு, திட்டக்குடி, கோயில் ரதவீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இரவு 8:00 மணிக்கு சிலைகளை கோயில் அக்னி தீர்த்த கடலில் கரைத்தனர்.
28-Aug-2025