உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  45 சதவீதம் மாணவருக்கு ஆதார் இல்லை பள்ளிகளில் முகாம் நடத்த வலியுறுத்தல்

 45 சதவீதம் மாணவருக்கு ஆதார் இல்லை பள்ளிகளில் முகாம் நடத்த வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 45 சதவீதம் மாணவர்கள் ஆதார் எண் இல்லாமல் இருப்பதால் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்களை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களில் 45 சதவீதம் பேருக்கு ஆதார் எண் இல்லை. மாணவர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகையை பெறவும், வங்கி கணக்கு துவங்கவும், ஆதார் எண், அதன் இணைப்பு அவசியம். குறிப்பாக 5 முதல் 7 வயது வரையிலும், 15 முதல் 17 வயது வரையிலும் உள்ள மாணவர்களுக்கு ஆதார் எண் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள பெற்றோரும், மாணவர்களும் இ--சேவை மையங்களுக்கு செல்கின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும், அலைச்சலும் ஏற்படுகிறது. இது குறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தாலுகாவில் 45 சதவீதம் மாணவர்களுக்கு ஆதார் இல்லை. அனைத்து பள்ளிகளிலும் ஆதார் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி யுள்ளோம். அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் தேவைப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் சிறப்பு முகாம்களை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை