மேலும் செய்திகள்
நாவல் பழம் தின்று 7 மாணவர் பாதிப்பு
08-Jul-2025
கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தின்பண்டம் சாப்பிட்ட கிளாமரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், 7 பேர் மயக்கம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கமுதி அருகே கிளாமரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. வழக்கம் போல நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமானோர் வரவில்லை.இந்நிலையில், பள்ளியில் உள்ள ஐந்தாம் வகுப்பை சேர்ந்த மாணவர் ஒருவர், கடையில் தின்பண்டம் வாங்கி மற்ற மாணவர்களும் கொடுத்து சாப்பிட்டார்.சிறிது நேரத்தில் ஒருவர்பின் ஒருவராக ஏழு மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இவர்களுக்கு ராமசாமிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சக்தீஸ்வரன் கிளாமரத்திலுள்ள கடையில் ஆய்வு செய்தார். சாப்பிட்ட தின்பண்டம் குறித்து உணவு பாதுகாப்பு, சுகாதார துறையினர் விசாரிக்கின்றனர்.
08-Jul-2025