உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் இயலாதவர்களுக்கு உதவி செய்யும் மாற்றுத்திறனாளி

கீழக்கரையில் இயலாதவர்களுக்கு உதவி செய்யும் மாற்றுத்திறனாளி

கீழக்கரை: -கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் சபீர் அலி 54. மாற்றுத்திறனாளியான இவர் பல்வேறு சமூக சேவை செய்வதில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். அவர் கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கான சேவை செய்து வருகிறேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு முதுகுத் தண்டுவட பிரச்னை ஏற்பட்டதால் மாற்றுத்திறனாளியாக உள்ளேன். அரசு வழங்கிய மூன்று சக்கர டூவீலரில் பொதுமக்கள் கூறும் பிரச்னைகள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகிறேன். கீழக்கரை நகராட்சியில் சேதமடைந்த சாலை, மின் கம்பம், கழிவு நீர் தேக்கம் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு மனு அளிக்கிறேன். இதே போல் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும் பொது மக்களுக்கு இலவசமாக செய்து வருகிறேன். பிறருக்கு உதவி செய்வது சந்தோஷம் அளிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்