உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பேய்க்குளத்தில் புதிய விதை நெல் சேமிப்பு கிடங்கை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்

பேய்க்குளத்தில் புதிய விதை நெல் சேமிப்பு கிடங்கை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்

சிக்கல்: சிக்கல் அருகே பேய்க்குளத்தில் நெல் மற்றும்தானியங்கள் விதை சேமிப்பு கிடங்கு புதிய கட்டடம் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.கடலாடி வட்டார துணை வேளாண் விரிவாக்கம் மையம் சார்பில் நபார்டு வங்கி உதவியுடன் 2020-21ல் புதிய கட்டடம் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிறது.தற்போது நெல் விதை சேகரிக்கக் கூடிய காலமானஇச்சமயத்தில் புதிய கட்டடம் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:உரியநேரத்தில் கடலாடிவேளாண் துறை அதிகாரிகள் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். காலம் தாழ்த்துவதால் கட்டடம் கட்டப்பட்டதன் நோக்கம் கேள்விக்குறியாகிவிடும். இரவு நேரங்களில் மதுபானம் அருந்தும் இடமாகவும் உள்ளது.எனவே குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை