உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டவுன் பஸ்சின் ஒருபகுதி விபத்தில் கழன்று விழுந்தது 

டவுன் பஸ்சின் ஒருபகுதி விபத்தில் கழன்று விழுந்தது 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகரில் மினி சரக்கு வாகனம் டவுன் பஸ் பின் பகுதியில் மோதியதில் பஸ்சின் ஒரு பகுதி கழன்று விழுந்தது. ராமநாதபுரத்தில் இருந்து 55 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட காலாவதியான பஸ்களை அரசு கால நீட்டிப்பு வழங்கி இயக்கப்பட்டு வருகின்றன. ஓட்டை, உடைசல் பஸ்கள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.இதில் 4 சி வழித்தடத்தில் பெரியபட்டினத்திற்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று பாரதிநகர் பஸ் ஸ்டாப்பில் நின்று பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் மோதியது.இதில் டவுன் பஸ்சின் பின் பகுதியில் இருக்கையில் இருந்த ஒரு பகுதி கழன்று விழுந்தது. நல்ல வேளையாக பயணிகளுக்கோ, பாதசாரிகளுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை. இப்படி ஓட்டை, உடைசல் பஸ்களை இயக்குவதால் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியதாக உள்ளது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ