| ADDED : நவ 25, 2025 05:25 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக (மி.மீ., அளவில்) தொண்டி 87.40, ஆர்.எஸ்.மங்கலம் 77.50, கமுதி 66.20, திருவாடானை 58.40, தீர்த்தாண்டதானம் 54.70, கடலாடி 51, பரமக்குடி 47.40, ராமநாதபுரம் 45, மண்டபம் 30, வட்டாணம் 27.80, வாலிநோக்கம் 27.40, பாம்பன் 23.70, தங்கச்சிமடம் 21, ராமேஸ்வரம் 19, முதுகுளத்துார் 14.80 மழை பெய்துள்ளது. தொடர் மழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. ரோட்டிலும், பஸ் ஸ்டாண்டிலும் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கல்லுாரி, பணிக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர். ராமநாதபுரம் அருகே லாந்தை பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. தாமரைக்குடி, கண்ணனை, லாந்தை உள்ளிட்ட கிராமங்களுக்கு சுரங்கப்பாதை வழியாக மட்டும் தான் செல்ல முடியும். மழைநீர் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் கிராமங்களில் முடங்கினர். டூவீலரில் தண்டவாளத்தை கடந்து சிலர் பணிக்கு சென்றனர். மழைக்காலத்தின் போது சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.