உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

ராமநாதபுரம்: கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செவ்வாய் தோறும் இரவு 7:45 மணிக்கு விரைவு ரயில் (எண் 16618) இயக்கப்படுகிறது. மறு மார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து புதன் தோறும் இரவு 7:55க்கு புறப்பட்டு மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 6:30 மணிக்கு கோவை செல்கிறது. இந்த ரயில் 7 ஏ.சி., பெட்டிகள், 6 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்படுவதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நவ.,4 முதல் அடுத்த ஆண்டு ஏப்.,29- வரை கோவை--ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை