உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய்  சாகுபடியில் அழுகல் நோயை  கட்டுப்படுத்த வேளாண் துறை யோசனை

மிளகாய்  சாகுபடியில் அழுகல் நோயை  கட்டுப்படுத்த வேளாண் துறை யோசனை

ராமநாதபுரம்: மழைக்காலத்தில் மிளகாய் சாகுபடியில் காய் அழுகல் நோயை கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்தபின் விதைக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது. மழையால் ஏற்பட்ட குளிர் கால சூழ்நிலையால் மிளகாய் பயிரில் காய் அழுகல் நோயை ஏற்படுத்தும் காரணிகள் பெருகி காய் அழுகல் நோய் பரவலாக எல்லா பகுதிகளிலும் காணப்படும். இந்நோயால் காய்த்த மிளகாய் பழங்கள், வெளிரிய நிறமாக மாறி சோடையாவதால் தரம் குறைந்துவிடும். எனவே விவசாயிகள் மிளகாய் விதைகளை நாற்றாங்காலில் விதைக்கும் முன் இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைக்க வேண்டும். அழுகல் நோயை கட்டுப்படுத்த கிலோ மிளகாய் விதையை 5 கிராம் சுடோமோனஸ் அல்லது 10 கிராம் டிரைகோடொமா விரிடி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். திரம் அல்லது கேப்டான் போன்ற ரசாயன பூஞ்சான கொல்லிகளுடன் ஒரு கிலோ மிளகாய் விதைக்கு 5 கிராம் வீதம் கலந்தும் விதை நேர்த்தி செய்யலாம். மிளகாய் நாற்றுகள் மறுநடவு செய்யும் போது டிரைகோடொமா விரிடி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணி 10 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றுகளின் வேர் பகுதியை 20, 30 நிமிடங்கள் முழ்கிய பின் நடவு செய்து காய் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம் என ராமநாதபுரம் தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை