உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வரிசை விதைப்பால் அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை

வரிசை விதைப்பால் அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை

முதுகுளத்துார்:' நெற்பயிர் வரிசை விதைப்பு முறையில் சரியான அளவில் பராமரிக்கப்படுவதால் அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண்மை துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.முதுகுளத்துார் தாலுகா 100க்கும் கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக மானாவாரி பயிராக நெல் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் வரிசை விதைப்பு கருவி மூலம் விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காக்கூர் கிராமத்தில் வரிசை விதைப்பு பணியினை வேளாண்மை துணை இயக்குநர் அமர்லால் ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது, வரிசை விதைப்பு செய்வதால் களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல் பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். பயிர் எண்ணிக்கை சரியான அளவில் பராமரிக்கப்படுவதால் நல்ல மகசூல் கிடைக்கும் என்றார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் உட்பட விவசாயிகள் பலரும் இருந்தனர். ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் ஜெயகண்ணன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை