உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் ஆம்புலன்ஸ் பழுது: நோயாளிகள் சிரமம்

கமுதியில் ஆம்புலன்ஸ் பழுது: நோயாளிகள் சிரமம்

கமுதி: கமுதி அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ் 108 பத்து நாட்களாக பழுதாகி உள்ள நிலையில் தள்ளிவிட்டு இயக்கப்பட்டு வருவதால் நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.கமுதி அரசு மருத்துவமனையில் கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். வாகன விபத்து, தலை காயம், இருதய நோய், அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பரிந்துரைக்கப்படுகின்றனர்.அது மட்டுமில்லாமல் கர்ப்பிணிகள், வாகன விபத்துகள் நோய்களால் பாதிக்கப்படுவோர் ஆம்புலன்ஸ் 108 மூலம் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ஆம்புலன்ஸ் பழுதாகி உள்ளது. இதனால் அவசர உதவிக்கு கூட இந்த வாகனத்தை இயக்க முடியாத நிலையில் ஊழியர்கள் உள்ளனர்.மேல் சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளிகள் பொதுமக்களின் உதவியுடன் ஆம்புலன்சை தள்ளிவிட்டு ஓட்டிச் செல்கின்றனர். இதனால் பாதி வழியில் பழுதாகி நின்று விடும் அச்சத்தில் நோயாளிகள் செல்கின்றனர். மக்கள் கூறியதாவது:கமுதி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாகியும் பழுதாகி நிற்கும் ஆம்புலன்சால் அவசர நேரத்தில் கூட நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல முடியவில்லை.அது மட்டும் இல்லாமல் தள்ளிவிட்டு இயக்கப்படுவதால் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாதி வழியில் பழுதானால் நோயாளிகள் உயிர் போகும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கமுதி அரசு மருத்துவமனையில் உள்ள பழைய ஆம்புலன்ஸ் வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !