உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆனந்துார் அரசு பள்ளி வளைவு ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்க வலியுறுத்தல்

ஆனந்துார் அரசு பள்ளி வளைவு ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆனந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வளைவு ரோட்டில் விபத்துக்களை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகங்கை சருகணி செல்லும் ரோட்டில் ஆனந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இந்தப் பள்ளியை ஒட்டியவாறு செல்லும் சருகணி ரோட்டில் பள்ளியை ஒட்டியுள்ள வளைவு பிரிவு சாலையில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத வகையில் பள்ளி கட்டடங்கள் அமைந்துள்ளதால் எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆனந்துார் பள்ளியை ஒட்டிய வளைவு ரோட்டில் எதிர் வரும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்காத வகையில் ரோட்டின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை