உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ஜன.13ல் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரத்தில் ஜன.13ல் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.,13ல் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளிக்கவுள்ளார்.ஆருத்ரா தரிசனம் விழாவையொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயிலில் மாணிக்கவாசகருக்கு கோயில் குருக்கள் காப்பு கட்டி மகா தீபாராதனை நடத்தினர். இன்று (ஜன.,5) முதல் ஜன.,13 வரை மாணிக்கவாசகர் மரப்பல்லக்கில் எழுந்தருளி கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வருவார்.ஆருத்ரா தரிசன நடக்கும் ஜன.,13ல் கோயிலில் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து அதிகாலை 3:00 மணி முதல் 3:30 மணி வரை ஸ்படிகலிங்கம் பூஜையும், தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி பூஜையும் நடக்கிறது.சபாபதி சன்னதியில் உள்ள நடராஜருக்கு அதிகாலை 3:00 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. 4:15 மணிக்கு மாணிக்கவாசகர் புறப்பாடாகி சபாபதி சன்னதி முன்பு எழுந்தருளி திருவாசகம் பாடும் நிகழ்ச்சி நடக்கும்.பின் 5:15 மணிக்கு நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.காலை 10:00 மணிக்கு மேல் ஸ்ரீ நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வீதி உலா நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை