உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எஸ்.பி.பட்டினத்தில் ஏ.டி.எம்., செயல்படவில்லை

எஸ்.பி.பட்டினத்தில் ஏ.டி.எம்., செயல்படவில்லை

தொண்டி: எஸ்.பி.பட்டினத்தில் ஏ.டி.எம்., இயங்காததால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர். தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் 2ஏ.டி.எம்., உள்ளது. 20 நாட்களுக்கும் மேலாக இயந்திரக் கோளாறு காரணமாக ஏ.டி.எம்., இயங்காமல் உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இது குறித்து ஓரியூர் சசி கூறியதாவது: ஓரியூரில் தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. அந்த ஏ.டி.எம்., செயல்படாததால் 5 கி.மீ.,ல் உள்ள எஸ்.பி.பட்டினத்திற்கு செல்கிறோம். அங்குள்ள இரு ஏ.டி.எம்.,களும் இயங்காமல் உள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஏ.டி.எம்., செயல்பட வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை