அக்.30ல் முதல்வர் வருகையின் போது பார்த்திபனுாரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பரமக்குடி விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
பரமக்குடி: பரமக்குடியில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவ சாயிகள் கூட்டமைப்பின் மூன்று மாவட்டம் சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், அக்., 30ல் பசும்பொன் வரும் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பார்த்திபனுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. பரமக்குடி மக்கள் நுாலகத்தில் ராமநாத புரம், சிவகங்கை, விருது நகர் மாவட்ட விவசாயிகள் கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் அர்ஜுனன் தலைமை வகித்தார். காவிரி நீர் வீணாக கடலில் கலக்காமல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் என 7 மாவட்டங்களில் உள்ள 8 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் உள்ளது. 2021 பிப்.,21ல் அடிக்கல் நாட்டி 800 கோடி ரூபாய் ஒதுக்கி கால்வாய் வெட்டும் பணிகள் துவங்கியது. ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் 5 ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. 2024ல் பசும்பொன் வந்த முதல்வர் திட்டத்தை நிறை வேற்றுவேன் என வாக் குறுதி அளித்தார். ஆனால் ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் ஏராளமான ஆய்வுக் கிணறு களை தோண்டியுள்ளது. திட்டத்தை திரும்ப பெற்று மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீடு பிரச்னை யில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். காட்டுப்பன்றிகள், மான், காட்டு மாடுகளால் பயிர் சேதம் அடைகிறது. இதை கலெக்டர்கள் கண்டு கொள்வதில்லை. பூர்வீக வைகை பாசன விவசாயிகளை பாதுகாக்க தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் வருகையின் போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.