உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  அமிர்தா பள்ளியில் விழிப்புணர்வு

 அமிர்தா பள்ளியில் விழிப்புணர்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நேற்று ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுப்பது, இதில் இருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் இந்திராதேவி தலைமை வகித்தார். தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் சிறப்புரை ஆற்றினார். ஏட்டு கேசவன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றத்தை தடுத்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விளக்கி பேசினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ