உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் பால்குடம் விழா

பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் பால்குடம் விழா

பரமக்குடி : பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் மாசி மகம் பால்குட விழா நடந்தது.பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆறு படித்துறையில் சக்தி குமரன் செந்தில் கோயில் உள்ளது. இக்கோயிலில் 48ம் ஆண்டு திருச்செந்துார் சைக்கிள் பயண விழா பிப்.22ல் துவங்கியது. அன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சண்முகா அர்ச்சனை நடந்தது.தொடர்ந்து பிப்.23 மாலை 5:00 மணிக்கு குருவடியார் சுப.இலக்குமணன் தலைமையில் நடந்த திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் ஆடலரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நேற்று காலை மாசிமக விழாவையொட்டி 7:00 மணிக்கு பெருமாள் கோயில் முன்பு வைகை ஆற்றில் இருந்து பால் குடங்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து 10:00 மணிக்கு பால் குடங்கள் புறப்பாடாகி 11:00 மணிக்கு கோயிலை அடைந்தது.அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மூலவர் விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று(பிப்.25) மதியம் அன்னதானம், நாளை(பிப்.26) காலை 9:00 மணிக்கு ஏராளமான முருக பக்தர்கள் 48 ம் ஆண்டாக சைக்கிளில் திருச்செந்துார் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி