உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத்திய அரசின் கல்வி கட்டணத்தை பள்ளிக்கு வழங்க பா.ஜ., கோரிக்கை

மத்திய அரசின் கல்வி கட்டணத்தை பள்ளிக்கு வழங்க பா.ஜ., கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., கல்வியாளர் பிரிவு சார்பில் மத்திய அரசு வழங்கியுள்ள கல்வி கட்டணத் தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்க வலியுறுத்தினர். ராமநாதபுரம் பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாம் மற்றும் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மத்திய அரசு இலவச கட்டாயக்கல்வி திட்டத்தில் 25 சதவீதம் கட்டண பாக்கி ரூ.586 கோடியை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. அத்தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தொகையை உடன் வழங்க வேண்டும். காலம் தாழ்த்தினால் தமிழக அரசை கண்டித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவுப்படி பா.ஜ., கல்வியாளர் பிரிவு சார்பில் தமிழக முழுவதும் நவ.,4ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை