| ADDED : நவ 23, 2025 04:37 AM
முதுகுளத்துார்: பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதுாறாக பேசிய தி.மு.க., தென்காசி மாவட்ட செயலாளர் ஜெயபாலனை கைது செய்ய வலியுறுத்தி முதுகுளத்துார் ஒன்றிய பா.ஜ., வினர் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர். தென்காசி தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெயபாலன் சில நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் வன்முறையை துாண்டும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடியை பற்றி அவதுாறாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசி உள்ளார். இதுகுறித்த வீடியோ பரவுகிறது. இதையடுத்து முதுகுளத்துார் ஒன்றிய பா.ஜ.,வினர் ஜெயபாலனை கைது செய்ய வலியுறுத்தி முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர். உடன் ஒன்றிய தலைவர்கள் மோகன்தாஸ், சேதுராமன், மண்டல பார்வையாளர் சேதுராமு உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.