உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குண்டும், குழியுமான புல்லமடை ரோடு: வாகன ஓட்டிகள் சிரமம்

குண்டும், குழியுமான புல்லமடை ரோடு: வாகன ஓட்டிகள் சிரமம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார் பட்டணம் விலக்கிலிருந்து புல்லமடை செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை விலக்கில் இருந்து புல்லமடை செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டை அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டு குழியுமாக உள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை