உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்டத்தில் பஸ் ஸ்டிரைக் 50:50 சதவீதம்! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பஸ் ஸ்டிரைக் 50:50 சதவீதம்! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை 

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த வேலை நிறுத்தத்தால் 50 சதவீதம் பஸ்கள் இயக்கப்படாத நிலையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகர், புறநகர் கிளைகள், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. ராமநாதபுரம் நகரில் 59, புறநகர் கிளையில் 65, ராமேஸ்வரம் 64, பரமக்குடி 70, கமுதி 30, முதுகுளத்துாரில் 30 என 318 பஸ்கள் அரசு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படுகின்றன. இது தவிர ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வெளி மாவட்டங்களான திருச்சி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, கோவை, மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் பஸ்கள் இயக்கப்டுகின்றன. போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நேற்று ராமநாதபுரம் மாவட்டதில் 40 சதவீதம் அளவில் 125 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக சி.ஐ.டி.யூ., மத்திய தொழிற்சங்க நிர்வாகி பாஸ்கரன் தெரிவித்தார். அதே நேரம் அதிகாரிகள் 75 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தனர். *வாக்குவாதம்: நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ராமநாதபுரம் நகர் கிளையில் ஓய்வு ஊழியர்கள், அண்ணா தொழிற்சங்கத்தினருக்கும், தொ.மு.ச., வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் கலைந்து செல்லுமாறு கூறியதால் அமைதி ஏற்பட்டது. புறநகர் கிளையில் சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கத்தினர் அதிகாலையில் பணிமனை கிளை முன்பு கூடினர். வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு பஸ்களை இயக்க சென்ற தொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டனர். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை