உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மழையால் வரத்து குறைந்து காலிபிளவர் விலை உயர்வு

 மழையால் வரத்து குறைந்து காலிபிளவர் விலை உயர்வு

ராமநாதபுரம்: மழை காரணமாக ராமநாதபுரம் சந்தைக்கு காலிபிளவர் வரத்து குறைவால் விலை அதிகரித்து பூ ஒன்று ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப் பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்கள், காய் கறிகள் சாகுபடி குறைந்த அளவில் நடக்கிறது. இதன் காரணமாக வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து காய்கறி, பழங்கள் ராமநாதபுரம் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. குறிப்பாக காலி பிளவர் வரத்தின்றி கடந்த மாதம் ஒன்று ரூ.20 முதல் ரூ.40 விற்றது. தற்போது ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப் படுகிறது என வியா பாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி