மேலும் செய்திகள்
தாசில்தார் பொறுப்பேற்பு
30-Aug-2024
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மைய பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் விண்ணப்பிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட இ-சேவை மைய பொறுப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை தாசில்தார் உதயகுமார் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் இ-சேவை மைய பொறுப்பாளர்கள் இணையதள சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் தாசில்தார் வரதராஜன் விளக்கினார்.மேலும் சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்யும் போது மைய பொறுப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் ஆவணங்களை பதிவேற்ற செய்வதுடன் விண்ணப்பதாரர்களிடம் முறையான கையொப்பம் பெற்று சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பயிற்சி கூட்டத்தில் ஆர்.ஐ.,கள் ஆதிலட்சுமி, சாத்தையா, ஆரோக்கியராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
30-Aug-2024