மேலும் செய்திகள்
குறைதீர்வு கூட்டத்தில் 358 மனுக்கள் ஏற்பு
07-Oct-2025
ராமநாதபுரம்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களில் தீர்வு அளிக்க முடியாத மனுக்கள் குறித்து அதற்குரிய காரணத்துடன் மனுதாரர்களிடம் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக 317 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது: ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர் களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத் துரைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) புகாரில், மாவட்ட சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொ) முத்து கழுவன், மாவட்ட வழங்கல் அலுவலர் காசி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
07-Oct-2025