உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்

 சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்

சுற்றுச்சூழல் சீர்கேடு திருப்புல்லாணியில் இருந்து உத்தரகோசமங்கை செல்லும் ரோட்டோரத்தில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே குப்பை கொட்டுவதை தடுத்து எரிப் பவர்கள் மீது ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - என்.கணேசன், உத்தரசோசமங்கை தெருநாய்கள் தொல்லை ராமநாதபுரம் பெரியார் நகரில் ரோட்டில் திரியும் நாய்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற் படுகிறது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி.மேனகா , ராமநாதபுரம். குளமாகும் ரோடு மழை பெய்தால் பட்டணம்காத்தான் ஓம் சக்திநகர் ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது. தடையின்றி தண்ணீர் செல்ல அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். - ஏ.சுமதி, பட்டணம்காத்தான் பன்றிகளால் தொல்லை டி-பிளாக் ரோடு குடியிருப்பு பகுதியில் பன்றிகள் திரிவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். - எஸ். பிரபு, சக்கரக்கோட்டை எரியாத விளக்குகளால் ஆபத்து​ ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் உள்ள விளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுவதால் இரவில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. பழுதான மின் விளக்குகள் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். -எம். சாகுல் அமீது, ராமநாதபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை