வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை. போராடுவோம்
ராமேஸ்வரம்:'ஹிந்துக்கள் வணங்கும் ஸ்ரீராமரை இழிவுபடுத்தி பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்,' என, தமிழ்நாடு கம்பன் கழகத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு, புதுவை கம்பன் கழக ஒருங்கிணைப்பு செயலாளர் கே.முரளிதரன் கூறியதாவது: ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் ஸ்ரீராமரை, அதுவும் கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து இழிவுபடுத்தி பேசியது கண்டனத்திற்குரியது. இவர் ஹிந்து கடவுளை மட்டும் குறிவைத்து தரக்குறைவாக பேசுவது வழக்கமாக உள்ளது. இதன் மூலம் இவர் அடைந்த பயன் என்ன. யாரை குளிர வைக்க இவ்வாறு பேசுகிறார் என தெரியவில்லை. ராமரின் வரலாற்றை பறைசாற்றும் கம்பன் விழாவில் வைரமுத்து சர்ச்சையாக பேசியது கோடிக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. இச்செயலுக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்றார்.
அருமை. போராடுவோம்