உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சிறந்த வங்கியாக கூட்டுறவு நிலவள வங்கி 16வது முறையாக தேர்வு

 சிறந்த வங்கியாக கூட்டுறவு நிலவள வங்கி 16வது முறையாக தேர்வு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கூட்டுறவு நிலவள வங்கி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து 16வது முறையாக சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டு கேடயம் பெற்றது. முதுகுளத்துார் கடலாடி ரோட்டில் கூட்டுறவு நிலவள வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு முதுகுளத்துார், கடலாடி தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நகைக்கடன் பெற்று பயனடைகின்றனர். தொடர்ந்து 16வது முறையாக கூட்டுறவு வார விழாவில் சிறந்த வங்கிக்கான விருது பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டிற்கான விருது மற்றும் கேடயத்தை செயலாளர் திருப்பதி பெற்றார். அவர் கூறியதாவது: வங்கி பல ஆண்டுகளாக முதுகுளத்துாரில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. பின் கடலாடி ரோட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அனைத்து வசதிகளிடம் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து 16 ஆண்டுகளாக நகைக்கடன் வழங்குதல், பராமரிப்பு உள்ளிட்டவற்றில் மாவட்டத்தில் சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்று வருகிறோம். இதற்கு உறுதுணையாக உள்ள மண்டல இணை பதிவாளர் ஜீனு, சரக துணை பதிவாளர் ரத்தினவேல், மேலாண்மை இயக்குனர் திருலோகசந்தர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்