உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

காவரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

திருவாடானை : காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது. தலைவர் முகமதுமுக்தார் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் கணேசன், (ஊராட்சி) சந்திரமோகன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கவுன்சிலர் அருணாசலம்: குஞ்சங்குளத்தல் குடிநீர் தட்டுபாடு உள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.தலைவர்: காவிரி கூட்டுக் குடிநீர் திட்டபணிகள் துவங்கி ஏழு மாதங்களாகியும் பணிகள் மந்தமாக நடக்கிறது. இன்னும் 11மாதங்களுக்கு பணிகள் முடியுமா என்று கேள்விக்குறியாக உள்ளது. குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆகவே காவரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதுவரை கிராமங்களில் அத்தியாவசிய தேவையாக உள்ள குடிநீர் தட்டுபாட்டை போக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.சமூகநலத்திட்ட அலுவலர் சுசி: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கிறது. கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து உடனே தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.போன்ற விவாதங்கள் நடந்தது. துணை பி.டி.ஓ., முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை