| ADDED : நவ 27, 2025 06:37 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் நிறு வனங்களில் தரமற்ற விதைகள் விற்பனை செய்வது கண்டறியப் பட்டால் அந்நிறுவனம் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வுத் துறை இயக்குநர் இப்ராம்சா தெரிவித்து உள்ளார். அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயிர் சாகுபடிக்குத் தேவையான விதைகள் அரசு, தனியார் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளில் விற்கப் படுகிறது. விவசாயி களுக்கு தரமான சான்றளிக்கப்பட்டவிதை வழங்கப்பட வேண்டும். மாவட்டங்களில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு சார்ந்த விதை உற்பத்தி நிறுவனங்கள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்களில் விதை மாதிரிகள் ஒவ்வொரு விதைக்கும் வயல்களிலும் விதை ஆய்வாளர்களால் எடுக்கப்பட்டு விதைப்பரிசோதனை நிலையங் களுக்கு அனுப்பப் படுகின்றது. இவ்வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சேகரிக்கப்படும் விதை மாதிரிகள் பரமக்குடி விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு விதைகளின் தரம் அறியப்படுகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025--26ம் ஆண்டில் இதுநாள் வரை 624 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தரமற்றவை களாக 19 மாதிரிகள் தெரிய வந்து விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை (கட்டுப்பாட்டு) ஆணை 1983 அடிப்படையில் 16 நிறு வனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.